கேரளா லாட்டரி துறை பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகளை டிச. 4 அறிவித்தது. இதில் முதல் பரிசான 12 கோடி ரூபாய் JC 325526 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு கிடைத்தது. இந்த லாட்டரி டிக்கெட்டை கொல்லம், கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்த பால்பண்ணை ஊழியரான தினேஷ்குமார் என்பவர் வாங்கி இருந்தார். இதன் மூலம் ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு அதிபதியாகி பெரும் கோடீஸ்வரனாக அவர் மாறியுள்ளார்.