2024-ம் ஆண்டில் தேசிய தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பரபரப்பான விமான நிலையம் என்கிற இடத்தை அடைந்துள்ளது. இந்த விமான நிலையம் 2024 ஆண்டில் மட்டும் 73.67 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் போக்குவரத்தை கையாண்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் மும்பை விமான நிலையமும், மூன்றாவது இடத்தில் பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையமும் பரபரப்பான விமான நிலையங்களாக உருவெடுத்துள்ளன.