அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் 20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்து அரசு சாதனை படைத்துள்ளது. வாரிய உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.