நடராஜர் கோயிலில் அனைத்தும் சரியாக நடந்தால் அரசு எதிலும் தலையிடாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (டிச., 06) செய்தியாளர்களை சந்தித்த அவர், வரலாற்றில் இல்லாத அளவிற்கு கோயில் சொத்துக்களை அதிக அளவில் அரசு மீட்டுள்ளது. இதுவரை ரூ.6955 கோடி மதிப்புள்ள சொத்து மீட்கப்பட்டுள்ளது. 1,77,968 ஏக்கர் கோயில் நிலங்கள் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளன என்றார்.