மரக்கன்றுகள் நடும் விழா.

54பார்த்தது
மரக்கன்றுகள் நடும் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் அகச்சிப்பள்ளி ஊராட்சி கணவாய்பட்டி அருள்மிகு வெங்கட்ரமணா சாமி திருக்கோவில் வளாகத்தில் உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உரிமம் பெற்ற நில அளவர்கள் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் நா. சத்தியநாராயணன் தலைமை தாங்கினார், மாநில பொதுச் செயலாளர் வெற்றிவேல், மாநில பொருளாளர் கார்த்திகேயன், மாநில துணைத்தலைவர் ஆனந்த், மாநில துணை பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில முன்னாள் துணைத் தலைவர் ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் நந்தகுமார், மொக்கைசாமி உள்பட கபிலன், சத்தியமூர்த்தி மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு 100 மரக்கன்றுகளை நட்டனர். மேலும் தற்போது பல இடங்களில் மரங்களை அழித்து இயற்கை வளங்களை பாதுகாக்க தவறுகின்றனர். இதுபோன்ற மரக்கன்றுகளை வளர்த்து, எதிர்வரும் சந்ததியினருக்கு நல்ல ஆரோக்கியமான வழிகாட்டுதலாக தமிழ்நாடு நிலஅளவாளர்கள் சங்கத்தின் சார்பில் இதுபோன்ற மரக்கன்று நட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாங்கள் செயல்படுத்தி வருவதாக மாநில தலைவர் சத்திய நாராயணன் கூறினார். ஆண்டுத் தோறும் புரட்டாசி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்த கோவிலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 100 மரக்கன்றுகள் நடவும் நிகழ்வை பலரும் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி