கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை நீரில் அடித்து வந்த மண் ஊத்தங்கரை மரியதாஸ் மெட்டல் மார்ட் அருகே கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் மடுவாக நின்றது,
இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தடுமாறுகின்றன, மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது, இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படும் முன் இந்த மண் மேட்டை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.