இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டி20 போட்டியில் இளம் வீரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியுள்ளார். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதைத்தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 10 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட சதமடித்து அசத்தினார். இதன்மூலம் அதிவேகமாக சதமடித்த 2வது வீரரானார் அபிஷேக் சர்மா. ரோகித் சர்மா 35 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார்.