ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. ஜூனியர் டி20 உலகக் கோப்பையை 2வது முறையாக கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்துக் கூறிய பிசிசிஐ, இச்சாதனையை கவுரவிக்கும் வகையில் இந்திய மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.