அண்ணா பல்கலை. வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "FIR லீக் ஆனது முழுக்க அரசின் தவறு. அதனை பத்திரிகையாளர்கள் பக்கம் திசைதிருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது. 'யார் அந்த சார்' என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற, முறையான CBIசிபிஐ விசாரணையே நீதியை வெளிக்கொணரும்!" என்று பதிவிட்டுள்ளார்.