தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.2) பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் கரூர், காரைக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று செயல்படவில்லை என தெரிகிறது. மங்களகரமான நாள் என்பதால் பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை நாளான இன்று ஆவணப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அதற்கு ஈடாக வேறொரு நாளில் மாற்று விடுப்பு தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் அலுவலகங்கள் செயல்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.