ஜப்பானில் முதியோர்கள் சிறப்பாய் வாழ்வதற்காகவே, வேண்டுமென்றே குற்றங்களைச் செய்துவிட்டு சிறைகளில் வாழ்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானின் மிகப்பெரிய பெண்கள் சிறையாக டோச்சிகி சிறை கருதப்படுகிறது. இது, டோக்கியோவிற்கு வடக்கே அமைந்துள்ளது. இங்கு, கிட்டத்தட்ட 500 கைதிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வயதானவர்களாக உள்ளனர். பிள்ளைகள் தங்களை கவனிக்காததால் குற்றங்களை செய்துவிட்டு உள்ளே வந்துவிடுவதாக அவர்கள் கூறுகின்றனர்.