வீட்டு செப்டிக் டேங்கில் சுத்தம் செய்யும்போது தொழிலாளி உயிரிழக்க நேர்ந்தால், வீட்டின் உரிமையாளர்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநகராட்சி அந்த தொகையை தந்துவிட்டால் வீட்டு உரிமையாளர் அந்த தொகையை மாநகராட்சியிடம் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார்.