இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி T20 போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். மேலும் சிவம் துபே 30 ரன்கள், திலக் வர்மா 24 ரன்கள் எடுத்தனர். 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.