சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டி ஒன்றும் ஸ்பெஷலான மேட்ச் கிடையாது என்று இந்திய அணியின் கோச் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இதை மனதில் வைத்தே பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவோம் என்ற அவர், லீக் சுற்றில் உள்ள 5 போட்டிகளுமே எங்களுக்கு முக்கியமானதுதான். ரசிகர்களுக்கு வேண்டுமானால் பாக்.,க்கு எதிரான போட்டி ஸ்பெஷலாக இருக்கலாம் என்றார்.