ஜெர்மனி நாட்டின் முன்னாள் அதிபரும், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவருமான ஹோர்ஸ்ட் கோஹ்லர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர்க்கு வயது 81. ஹோர்ஸ்ட் கோஹ்லர் ஜெர்மனியின் அதிபராக 2004 முதல் 2010 வரை பதவியில் இருந்தார். இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2010-ம் ஆண்டு மே 31-ந்தேதி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஜெர்மன் ராணுவத்தினரை சந்தித்த பிறகு அவர் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியதால் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.