அரசு மருத்துவமனையில் காமராஜர் பிறந்தநாள் விழா.

54பார்த்தது
அரசு மருத்துவமனையில் காமராஜர் பிறந்தநாள் விழா.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , பர்கூர் பேரூர் கழகம் சார்பில், அரசு மருத்துவமனையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-வது பிறந்தநாளையோட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன். , MLA கலந்து கொண்டு திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் சரிவிகித காலை உணவு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது. இவ்விழாவில் மாநில , மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு பிறந்தநாள் விழாவினை சிறப்பித்தார்கள்.

தொடர்புடைய செய்தி