தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பேட்டியில், “தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கலைஞரின் கனவு திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளையும், அரசு அலுவலக கட்டிடங்கள் உட்பட வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தேன். வரும் காலங்களில் கலைஞரின் கனவு திட்டத்தை மாவட்டம் முழுவதும் பரவலாக கொண்டு செல்வதற்கு, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை எட்டுவோம்.” என்றார்.