மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி 3% முதல் 4% அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இந்த உயர்வின் மூலமாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 53% முதல் 54% உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண வீக்கத்திற்கு ஏற்ப அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது.