மத்தூர் அருகே பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியம் கொடமாண்டப்பட்டி ஊராட்சியில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயலட்சுமி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், உமாசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல், காங்கிரஸ் மாநில செயலாளர் ஆறுமுகம், மத்தூர் வட்டார தலைவர் தனஞ்செயன், விவேகானந்தன், வட்டார வர்த்தக பிரிவு வட்டார தலைவர் பூக்கடை மகி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.