ஒரு நூல்வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், "விஜய் - திருமா ஒரே மேடையில்" என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அரசியலாக்கியது. திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் கருத்து முரண்களை எழுப்பி, விரிசலை உருவாக்குவது தான் அதன் உள்நோக்கமாக இருக்கமுடியும் என கூறியுள்ளார்.