ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசின் குழு இன்று (டிச., 06) மாலை தமிழ்நாடு வருகை தரவுள்ளது. தொடர்ந்து விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை காலை வெள்ள பாதிப்புகளை பார்வையிட தொடங்குகின்றனர். புயல் பாதித்த மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் இக்குழு பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியை தமிழக அரசுக்கு வழங்கும்.