திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் அழகு (42) என்பவர் வீட்டில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்தார். இந்த நிலையில், வீட்டில் இருந்த துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்கள் திருடுபோகியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ராணுவ வீரர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமிர்தசரஸில் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி வரும் அழகு தனது பெற்றோர் வீட்டில் துப்பாக்கியை வைத்துள்ளார். அப்போது, இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.