கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் (62) புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், "எனக்கு நோய் இருப்பது உண்மைதான். ஆனால் புற்றுநோய் அல்ல. அந்த நோய் என்னவென்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். நான் நலமுடன் வருவேன்" என்று கூறியுள்ளார்.