தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான ஜெயபாரதி (77) நுரையீரல் தொற்று காரணமாக இன்று (டிச.6) காலை காலமானார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலை 6 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. தமிழகத்தில் முதல்முறையாக 1979ல் கிரவுட் பண்டிங் மூலம் ‘குடிசை’ என்ற படத்தை தயாரித்தார். கடைசியாக தமிழ்நாடு அரசின் 3 விருதுகளைப் பெற்ற புத்திரன் என்ற படத்தை 2010ல் இயக்கினார். இவர் இயக்கிய ‘நண்பா நண்பா’ படத்துக்காக தேசிய விருது கிடைத்தது.