தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டம்.
தமிழக அரசின் ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை கைது கண்டித்து,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில்
ஊத்தங்கரை பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் மண்டல தலைவர் கிரிதரன் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் வரதராஜன், முன்னாள் மாவட்ட பொது செயலாளர்கள் ஜெயராமன், சரவணன், தனக்கோடி, மகேந்திரன்,
சங்கர், தாமோதரன், நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவிந்தராஜ், விஸ்வநாதன், ஆறுமுகம், ரமேஷ், பிரபாகரன், ராஜ், தங்கராஜ், சிவகுமார், ரமேஷ், ஆனந்தன், சங்கர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசின் ஊழலை தட்டி கேட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்
அண்ணாமலையை விடுதலை செய்ய வேண்டி கோசமிட்டு
ஆர்ப்பாட்டம் செய்தனர். ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர்கள் மோகன், ஜெய்சங்கர் உள்ளிட்ட காவல்துறையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.