தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, கோவை, விருதுநகர், ராஜபாளையம், நீலகிரி, வேலூர் என பல இடங்களில் வெயிலுக்கு இதமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.