தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வந்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறையில் இல்லை. கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது, மதுபாட்டில் திரும்ப அளிப்பதில் முறைகேடு என ஆதாரத்தோடு நிரூபிப்பது அவசியம் என அவர் கூறியுள்ளார். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக பாஜகவினர் நடத்திய போராட்டத்திற்கு பிறகு இவ்வாறு பேசியுள்ளார்.