தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் (91) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரி அனந்தனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குமரி அனந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.