தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் வாட்டத் தொடங்கியுள்ளது. பலர் ஏசியின் உதவியை நாடுகின்றனர். ஏசி இல்லாமல் வீட்டை குளிர்ச்சியாக வைக்க ஒரு எளிய டிப்ஸ் உள்ளது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதை ஃப்ரிட்ஜின் ஃப்ரீசர் பகுதியில் காலை நேரத்தில் வைத்து விட வேண்டும். இதனை இரவு வெளியே எடுத்து உறங்கும் டேபிள் ஃபேனுக்கு முன்பாக வைத்துவிடலாம். இதில் பட்டு வரும் காற்று அறையை குளிர்ச்சி அடைய செய்யும். ஏசியே இல்லாமல் குளுகுளு காற்று கிடைக்கும்.