மருத்துவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

76பார்த்தது
கிருஷ்ணகிரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மருத்துவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவர்களுக்கு 
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சி மாவட்ட சமுக நல அலுவலர் சக்தி சுபாஷினி தலைமையில், மாவட்ட இணை இயக்குநர் சுகாதார பணிகள் டாக்டர். ரமேஷ்குமார் முன்னிலையில் நடந்தது.
 இதில் சுகாதார மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களிடம் பிறப்புக்கு முன்பு பாலின அடிப்படையில் கரு அளிக்கப்படுவதை தடுக்கும் விதமாக அனைத்து ஸ்கேன் மையங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பெண் குழந்தை பிறப்பினை போற்றி மரக்கன்று நடுவேண்டும் என தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் பிரபாகரன், சூப்பிரண்டு வி. கண்ணன், மிஷன் சக்தி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவி, வட்டார மருத்துவ அலுவலர்கள் ரங்கசாமி, தாமரைச்செல்வி உள்ளிட்ட பத்து  வட்டார மருத்துவ அலுவலர்கள் அனைத்து ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி