கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள கொடுகூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (38) நர்சரி வைத்துள்ளார். சம்பவம் அன்று இவரது கொட்டகையில் கட்டி வைத்திருந்த ஆட்டை மர்ம நபர்கள் இரண்டு பேர் சரக்கு வாகனத்தில் வந்து திருட முயன்ற போது ஆடு பலமாக சத்தம் போடவே கிருஷ்ணன் மற்றும் அங்கிருந்தவர்கள் மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார்.
மற்றொவரை பிடித்து கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோணகாப்பாடியை சேர்ந்த சதீஷ் (27) என்பதும், தப்பி ஓடியவர் அதே ஊரை சேர்ந்த தினேஷ் (26) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சதீசை போலீசார் கைது செய்தனர்.