ஒரே செடியில் பூத்த, 80 பிரம்ம கமலம் பூக்களை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து ரசித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே காரப்பள்ளியை சேர்ந்-தவர் இளையராஜா, 40. இவரது குடும்பத்தினர் ஆண்டுக்கு ஒரு-முறை மட்டுமே பூக்கும், பிரம்ம கமலம் செடியை, வீட்டில் வளர்த்து வருகின்றனர். இவர்களது வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடி, ஆண்டுக்கு இருமுறை பூத்து வருவதாக குடும்பத்-தினர் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இளையராஜா வீட்டில் இருந்த பிரம்ம கமலம் செடியில் ஒரே நேரத்தில், 80 பூக்கள் பூத்து குலுங்கின. இதையறிந்த காரப்பள்ளி பகுதியை சேர்ந்த பொது-மக்கள் ஏராளமானோர், இளையராஜா வீட்டிற்கு வந்து, பிரம்ம கமலம் பூக்களை ஆச்சர்யமாக பார்த்து ரசித்தனர். பிரம்ம கமலம் பூக்களை பறித்து, அவரது குடும்பத்தினர் சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர்.