பிரதம மந்திரி வீடு கட்டும் அதைப்பற்றி பேட்டி

1074பார்த்தது
கிருஷ்ணகிரி
சாந்தி நகரை சேர்ந்தவர் சந்திரன் மோகன். இவர் சாதாரண ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்,
வறுமை கொட்டிற்கு கீழ் உள்ள இவர் தனது வீடு பாலடைந்துள்ளதால் மழை காலங்களில் வீட்டிற்குள் தண்ணீர் கொட்டுவதால் தனக்கு பிரதம மந்திரி வீடு காட்டும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் அவரின் மனுவை ஏற்று அவருக்கு வீடு கட்டும் பணி உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் அவருக்கு பணம் எதுவும் வரவில்லை எனவும் அதிகாரிகள் நேரிலும் வரவில்லை.
இந்த நிலையில் சந்திர மோகனுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து தான் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயன் அடைந்ததற்கு வாழ்த்துக்கள் என கடிதம் ஒன்று வந்தது.
பின்னர் சந்திர மோகன் நேரில் சென்று விசாரித்தபோது அவர் வீடு கட்டிவிட்டதாகவும், அவருக்கு 2, 10, 000 பணம் வழங்கிவிட்டதாக
கூறி file close செய்துள்ளது தெரிந்ததை அடுத்து அதிர்ச்சி அடைக்குதார்.

பின்னர் கட்டாத வீட்டின் பெயரில் பணத்தை அபேஸ் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், என பல இடங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மனு அழித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சந்திர மோகன் வேதனையுடன் தெரிவித்தார்.
இனியாவது அரசு இதன் மீது பணத்தை அபேஸ் செய்த அதிகாரிகள் மீது பார்க்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி