மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்த உணவுகளை சாப்பிட்டால் தாம்பத்ய குறைபாடு நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள நார்ச்சத்துக்கள், உடல் எடை குறைக்க மட்டும் பயனளிப்பதில்லை, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து, குடல் இயங்குவதை முறையாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது. ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்களை பராமரிக்க மாப்பிள்ளை சம்பா அரிசி உதவுகிறது.