கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஐ. டி. ஐ. அருகே உள்ள பிரசித்தி பெற்ற மத்திகிரி ஸ்ரீ மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா, நேற்று நடைபெற்றது. இதில் வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், வேதபாராயணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை கான்பிக்கபட்டது. பின்னர் சிகர நிகழ்ச்சியாக நேற்று கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்து பின்னர் கோவில் விமானம் மற்றும் ராஜகோபுர விமானங்களுக்கு சிவாச்சாரியார் வேத மந்நிதரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கபட்டது. தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை செய்து சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை ஒட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும். கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றது.