கார் மோதி வடமாநில பெண் உயிரிழப்பு.

554பார்த்தது
கார் மோதி வடமாநில பெண் உயிரிழப்பு.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அஜித் படேல். இவருடைய மனைவி சங்கீதா தேவி (34) இவர்கள் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் தங்கி அஜித் படேல் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சங்கீதா தேவி நேற்று முன்தினம் மூக்கண்டப்பள்ளி அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சங்கீதா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி