கிருஷ்ணகிரி மகராஜகடை அடுத்துள்ள எலுமிச்சங்கிரியை சேர்ந்தவர் முருகேசன் (49). கூலிதொழிலாளியான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் இல்லாததால் நேற்று முன்தினம்(செப்.10) அவரது மனைவி கவிதா, மகராஜகடை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.