கொத்தாலத் தெரு முனியாண்டி கோவில் கும்பாபிஷேகம்

81பார்த்தது
கொத்தாலத் தெரு முனியாண்டி கோவில் கும்பாபிஷேகம்
மதுரையில் மன்னர் காலத்தில் படைக்கருவிகள் மற்றும் படைவீரர்கள் தங்கும் இடமாக கருதப்பட்ட கொத்தாலம் பகுதி நாளடைவில் கொத்தலத் தெருவாக மாறியது. இங்கு பழமை வாய்ந்த ராமர் கல் உள்ளது. கிராமத்து வழக்கப்படி கிராம பஞ்சாயத்துக்கள் நடைபெறும். கிராமத்தில் பஞ்சாயத்து சார்பாக நடைபெறும் விசாரணையில் மனு கொடுத்தவர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் இருவரும் தங்கள் தரப்பு நியாயத்தை முனியாண்டி கோவிலில் சத்தியம் செய்வது வழக்கம். பொய் சத்தியம் கூறுபவர்கள் முனியாண்டி சுவாமியால் தண்டிக்கப்படுவார்கள் என்பது இன்றும் நடைமுறையில் இருந்தது.

பழமை வாய்ந்த முனியாண்டி கோவிலில் கிராமத்து கமிட்டி சார்பில் நேற்று (ஜுலை 3) கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முனியாண்டி சுவாமி மற்றும் பரிகார தேவதைகளுக்கு அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி