நீலகிரி கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி பழங்குடி கிராமத்திற்கு கேரளா பதிவெண் கொண்ட 3 வாகனங்கள் நேற்று (ஜூன் 15) மாலை வந்துள்ளன. அந்த வாகனத்தில் இருந்த கேரள தம்பதி அங்குள்ள 14 வயது பழங்குடியின சிறுமிகள் மூன்று பேரை வாகனத்தில் ஏற்றினர். இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி சிறுமிகளை மீட்டனர். விசாரணையில், வீட்டு வேலைக்காக சிறுமிகள் அழைத்துச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.