பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை இந்த மாதம் இறுதியில் லண்டன் செல்ல இருக்கிறார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவராக வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், ஆகியோர் பெயர்கள் அடிபட்டது. இந்நிலையில் இவர்களெல்லாம் இல்லை புதிதாக நடிகை குஷ்பு பெயர் பரிசீலனையில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாகதான், திடீரென தனது தேசிய மகளிர் ஆணைய பதவியை குஷ்பு ராஜினாமா செய்தார். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என தெரியவந்துள்ளது.