வெள்ளை தலை உடைய 5 அடி நல்ல பாம்பு!

53பார்த்தது
வெள்ளை தலை உடைய 5 அடி நல்ல பாம்பு!
தூத்துக்குடி: விளாத்திகுளம் சிதம்பரம் நகர் குடியிருப்பு பகுதியில் வெள்ளையான தலையுடன் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளதாக, விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் வந்துள்ளது. தகவலை அடுத்து வனச்சரக அலுவலர் கவின் உத்தரவின் பேரில், வனவர் லிங்கமுத்து தலைமையில் வனக்காவலர்கள் ஜெயபாலமுருகன், அருண்குமார் மற்றும் வன உயிரின ஆர்வலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று குடியிருப்புக்குள் இருந்த 5 அடி நீளம் நல்ல பாம்பை பிடித்தனர். பிடிபட்ட நல்ல பாம்பு அல்பினிசம் என்ற குறைபாடு உடைய நாகப்பாம்பு என்று தெரியவந்தது. இதனையடுத்து அந்த பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.

தொடர்புடைய செய்தி