குளித்தலை - Kulithalai

குளித்தலையில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 17 பேர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தங்கள் மனு அனுப்பியது சம்பந்தமாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததை கேட்க நேற்று (நவம்பர் 23) வந்துள்ளனர். இதை அறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் விவசாயிகளிடம் கேட்டுள்ளனர். வட்டாட்சியர் வெளியே சென்றிருந்ததால் வெகுநேரம் காத்திருந்துள்ளனர். அதன் பின்னர் வந்த வட்டாட்சியரிடம் மருதூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கதவணை அமைக்காத நிலையில் சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக இப்பகுதியில் ஐந்து இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தும் அரசு விரோதமாக அங்கிருந்த ஆற்று மணலை எடுத்து கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். மனு அளித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என கேட்டுள்ளார். அப்போது விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலை பூட்டு போட்டு பூட்டியுள்ளார். அந்த நபரை போலீசார் வலுகட்டாயமாக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை அடுத்து அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా