கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூரை சேர்ந்தவர் நாகரெத்தினம் (58). இவர் நேற்று முன்தினம் அரசு பேருந்தில் லாலாபேட்டை செல்வதற்காக குளித்தலை அரசு பஸ் ஏறி குளித்தலை பேருந்து நிலையத்தில் இறங்க முற்பட்டுள்ளார். அப்போது முன்பக்க படிக்கட்டில் தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் பின்பக்க சக்கரம் நாகரத்தினம் இடது காலில் ஏறி காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுனர் செல்வம் என்பவர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.