கரூர்: அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு
கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குளித்தலை ஒன்றிய குழு சார்பில் குளித்தலை மக்களின் கோரிக்கை மனுக்களை வாங்கக்கூட நேரம் ஒதுக்காததையும், ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு அருகில் உள்ள பள்ளி நிர்வாகத்திற்கு ஒப்படைக்காத குளித்தலை சார் ஆட்சியரை கண்டித்து ஒன்றிய செயலாளர் முத்து செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அக்கட்சியை சேர்ந்த 45 நபர்கள் மீது குளித்தலை போலீசார் நேற்று (அக்.,24) வழக்கு பதிவு செய்தனர்.