கரூர் மாவட்டம் குளித்தலை வடக்கு கோட்ட மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 61. இவர் குளித்தலை காவிரி ஆற்று படுகையில் புற்று கோவில் பூசாரிகளாக இருந்து வருகிறார்.
இவரது தாயார் விபத்தில் உயிரிழந்தார்.
அதற்கான இழப்பீடு தொகை வந்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் ஆறுமுகத்தின் அண்ணன் நாகராஜ் மகன் விக்னேஷ் (35) மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றார்.
தனது பாட்டி விபத்தில் இறந்ததை இழப்பீடு தொகையில் எனக்கு ஏன் செலவுக்கு பணம் தரவில்லை என விக்னேஷ் தனது சித்தப்பாவிடம் தகராறு செய்து வந்ததாக தெரிய வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை 9. 30 மணி அளவில் கோவிலில் பூசாரி வேலையில் இருந்தபோது அங்கு வந்த விக்னேஷ் தகராறு செய்து தான் கையில் மறைத்து வைத்திருந்த பிச்சுவா கத்தியால் கழுத்தில் குத்தி ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரும் பொழுது சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதுகுறித்து குளித்தலை காவல் ஆய்வாளர் உதயகுமார் கோவில் பூசாரி ஆறுமுகம் கொடுத்த வாக்கு மூலத்தின் படி வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.