கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மயிலாடும்பாறை கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.
இங்கு நுகர்வோர் வழங்கும் பால் கூட்டுறவு சங்க செயலாளர் பரிசோதனை செய்யப்பட்டு 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேனில் பால் வண்டியில். ஏற்றப்பட்டு வருகிறது. பால் ஏற்றிச் செல்லும் வேன் எருமநாயக்கன்பட்டி, செம்மேடு, பணிக்கம்பட்டி, மயிலாடும்பாறை, கணேசபுரம், நடுப்பட்டி பாலம் பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் சேகரிக்கப்பட்ட பால் கேன் வேனில் ஏற்றி திருமலை ரெட்டியபட்டியில் செயல்பட்டு வரும் பால் குளிரூட்டப்பட்டு வரும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மயிலாடும்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலிருந்து ஏற்றி செல்லும் பால் வேன் டிரைவரான சூர்யா என்பவர் அருகில் உள்ள நடுப்பட்டி பால் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் செந்தூரமணி என்பவர் காலை மாலை இருவேளையிலும் மயிலாடும் பாறையில் இருந்து கொண்டுவரப்படும் பாலில் தினசரி 20 லிட்டர் பால் எடுத்துக்கொண்டு அதற்கு ஈடாக தண்ணீரை நிரப்பி உள்ளார்.
இந்த முறைகேடு அறிந்த
மயிலாடும்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் நுகர்வோர்கள் சங்க செயலாளர் பால் வேனை சிறைபிடித்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.