கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஒன்றிய பகுதிகளில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 79. 13 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.
அதன்படி தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட தளிஞ்சி ஊராட்சி ரெங்காச்சிப்பட்டியில் ரூபாய் 42. 96 லட்சம் மதிப்பில் தார் சாலையை பலப்படுத்தும் பணிக்கும், வடசேரி ஊராட்சி காவல்காரன் பட்டியில் உள்ள தெப்பக்குளத்தில் ரூ. 13. 81 லட்சம் மதிப்பில் புதிய பேவர் பிளாக் பாதை மற்றும் வேலி அமைப்பதற்கான பணிக்கும், பொருந்தலூர் ஊராட்சி பொன்னம்பட்டியில் ரூபாய் 22. 36 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிக்கு குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
மேலும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஆர்ச்சம்பட்டி ஊராட்சியில் ஒத்தக்கடை மெயின் ரோடு முதல் வேங்கைகுறிச்சி வரை ரூ. 31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய தார்ச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் எம்எல்ஏ நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தோகைமலை யூனியன் சேர்மன் சுகந்தி சசிகுமார், தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்எல்ஏ வுமான இராமர், தோகைமலை கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் சின்னையன், புவனேஸ்வரன் திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.