குளித்தலை எம்எல்ஏவிடம் வாலாந்தூர் மக்கள் கோரிக்கை

68பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வாலாந்தூர் கிராம மக்கள் குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக உள்ள தண்டவாளத்தை கடந்து நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். இதை ரயில்வே நிர்வாகம் பாதையை அடைத்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் குளித்தலை எம்எல்ஏவிடம் கோரிக்கை அளிக்கப்பட்டு மீண்டும் பாதை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலே ரயில்வே நிர்வாகம் மீண்டும் பாதையை அடைத்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் குளித்தலை சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த எம்எல்ஏவிடம் பேச்சு வார்த்தையில் நேற்று ஈடுபட்டனர். தொடர்ந்து இன்னும் இரண்டு தினங்களுக்கு பிறகு ரயில்வே அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை எடுத்து அனைவருக்கும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி