வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமை வைத்தார்.

வழக்கறிஞர் சங்க செயலாளர் நாகராஜன், மூத்த வழக்கறிஞர்கள் பாலன், காஜா மொய்தீன், செல்வகாந்தி, சரவணன், தமிழ்ச்செல்வன், முருகேசன், மது. மாதவன், வேலு, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஓசூர் பகுதியில் வழக்கறிஞர் கண்ணன் என்பவரை கொடூரமாக பொதுமக்கள் மத்தியில் அரிவாளால் வெட்டியதை கண்டித்தும் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை உறுதி செய்ய மத்திய மாநில அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் வழக்கறிஞருக்கு வழங்கக்கூடிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கண்டன கோஷம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி