புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா

64பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு 28 திட்டத்தின் கீழ் கூடுதல் 5 வகுப்பறை கட்டிடம் ரூபாய் ஒரு கோடியே 5 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடத்தினை தமிழக முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், பள்ளி தலைமை ஆசிரியர் ராதா உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் குத்து விளக்கு ஏற்றி வைத்து புதிய வகுப்பறை கட்டிடங்களை பார்வை செய்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், அதிகாரிகள் பள்ளி மாணவிகளுக்கும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர் உறுப்பினர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டடம் குளித்தலை வட்டாட்சியர் இந்துமதி, காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை, பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், திமுக பிரமுகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி